Home நாடு தகவல் தெரியாத ஆத்திரத்தில் பயணிகளின் உறவினர்கள்!

தகவல் தெரியாத ஆத்திரத்தில் பயணிகளின் உறவினர்கள்!

485
0
SHARE
Ad
unnamed (1)

கோலாலம்பூர், மார்ச் 8 – உரிய கடவுச்சீட்டுகளுடன் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் சிலர், அதிகாரிகள் வாய் திறக்க மறுத்ததால் கோபத்தில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

மாலை 6 மணிக்கு கடவுச்சீட்டுகளுடன் தயாராக வருமாறு தங்களிடம் அதிகாரிகள் கூறினர் என்றும், ஆனால் எங்கு செல்கிறோம் என்பதை தெரிவிக்கவில்லை என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

மாறாக, 24 மணி நேரத்திற்குள் அவர்களை அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

விமானம் காணாமல் போனது குறித்து, மாஸ் நிறுவனம் தங்களுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்று அங்கு வந்திருந்த உறவினர்களில் ஒருவர் தெரிவித்தார்.

விமானத்தில் பயணம் செய்த தனது சகோதருக்கு டிக்கெட் பதிவு செய்து கொடுத்த முகவர் தான், தனக்கு காலை 8 மணிக்கு அழைத்து தகவலை கூறியதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது இரண்டு மகள்களுடன் விமான நிலையத்திற்கு வந்த சீனப் பெண்மணி ஒருவர், விமானத்தில் பயணம் செய்த தனது கணவர் குறித்தும், விமானம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

அதற்கு மாஸ் அதிகாரிகள் பதில் கூற மறுத்துவிட்டதால், மகள்களில் ஒருவர், கோபத்தில் அதிகாரிகளை நோக்கி சத்தமாக கத்தியுள்ளார்.