Home நாடு அண்ணன் நிச்சயம் திரும்பி வருவார் – புஷ்பநாதனின் தங்கை நம்பிக்கை

அண்ணன் நிச்சயம் திரும்பி வருவார் – புஷ்பநாதனின் தங்கை நம்பிக்கை

703
0
SHARE
Ad

puspanathan_subramaniam_701218312கோலாலம்பூர், மார்ச் 9 – MH370 விமானத்தில் பயணம் செய்தவர்களில், மலேசிய இந்தியரான புஷ்பநாதனும் ஒருவர்.

விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது தங்கை தேன்மொழிக்கு ‘பிறந்தநாள்’ வாழ்த்து செய்தியை வாட்ஸ் அப் வழியாகப் பகிர்ந்து கொண்டதோடு, தான் சீனாவில் இருந்து திரும்பி வந்தவுடன் இரவு உணவிற்கு செல்லலாம் என்றும் கூறியுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 34 வயதான புஷ்பநாதனுக்கு, மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

#TamilSchoolmychoice

தனது அண்ணன் நிச்சயம் மீண்டும் வருவார் என்றும், தாங்கள் அவருடன் இரவு உணவிற்கு செல்வோம் என்றும் தேன்மொழி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரின் நம்பிக்கையும் நிறைவேறட்டும், பயணிகள் அனைவரும் பத்திரமாக திரும்பட்டும் என்பது தான் ஒட்டுமொத்த மக்களின் பிரார்த்தனையும்.