Home இந்தியா சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை, பெண்களுக்கு வேண்டும்-நரேந்திர மோடி!

சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை, பெண்களுக்கு வேண்டும்-நரேந்திர மோடி!

797
0
SHARE
Ad

Narendra Modiடெல்லி, மார்ச் 10 – பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடியை, ‘டீக்கடை நடத்தியவர்’ என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மணிசங்கர் அய்யர் உள்ளிட்ட பலர் விமர்சித்தனர். அதையே, தங்களின் தேர்தல் பிரசாரமாக மாற்றியது, பாரதிய ஜனதா.

நாட்டின் பல பகுதிகளிலுள்ள, டீக்கடைகளின் முன் கூடியிருக்கும் பொதுமக்களுடன், (‘வீடியோ கான்பரன்சிங்’) நேரலை முறை மூலம் மோடி, கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, ‘சாய் பே சர்ச்சா’ என பெயரிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் ‘சிறந்த நிர்வாகம்’ என்ற தலைப்பில், மோடி, கலந்துரையாடினார்.

இரண்டாவது நிகழ்ச்சி, சர்வதேச மகளிர் தினமான, நேற்று முன்தினம் நடந்தது. டில்லியில், பா.ஜ.க தலைமையகத்தின் வெளியேயுள்ள டீக்கடையில் அமர்ந்தபடி, நாட்டில், பல்வேறு பகுதிகளில் உள்ள, 1,500 டீக்கடைகளின் முன் திரண்டிருந்த மக்களிடம், மோடி, கலந்துரையாடினார்.

#TamilSchoolmychoice

முதன் முறையாக, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட, 15 வெளிநாடுகளிலும், கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்’ என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலில், மோடி கூறியதாவது, பெண்களிடம் பாகுபாடு காட்டுவது, மிக மோசமான நடவடிக்கை.

ஒரே குடும்பத்தில், ஆண் குழந்தையை ஒரு மாதிரியாகவும், பெண் குழந்தையை ஒரு மாதிரியாகவும் நடத்துகின்றனர். இந்த போக்கை கைவிட வேண்டும். கல்வி கற்பது, தொழிலை தேர்வு செய்வது, திருமணம் ஆகிய விஷயங்களில், சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை, பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இதன்மூலம் தான், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, சாத்தியமாகும்.

ஒரு பெண் கல்வி கற்பது, அவரைச் சார்ந்த, இரண்டு தலைமுறையினர், கல்வி கற்றதற்கு சமம். பெண்கள், கட்டாயம் படிக்க வேண்டும். குஜராத்தில் நான் முதல்வராக பதவியேற்றதும், பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தீவிரமான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். இதற்காக, குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள், கிராமம், கிராமமாக சென்று, ஒவ்வொரு வீட்டிலும், பெண் குழந்தைகளை படிக்க வைப்பது குறித்து, அறிவுறுத்தி வருகிறது.

எனது இலசியம் வரும், 2022-ஆம் ஆண்டுடன், நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள், நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும், குடிநீர், வீடு, பள்ளி, மின்சாரம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும், எளிதாக கிடைக்கச் செய்ய வேண்டும். இது, என் லட்சியம் மட்டுமல்ல, கனவும் கூட என மோடி  தன்  டீக்கடை விவாதித்தில் பேசினார்.