Home நாடு செலாமா பேராவில் பொங்கல் கலை விழா

செலாமா பேராவில் பொங்கல் கலை விழா

797
0
SHARE
Ad

ponggalசெலாமா பேரா, பிப்.14- வரும் 16.2.2013 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு செலாமா பேரா நகர மண்டபத்தில் பொங்கல் கலை விழா 2013  நடைபெறவிருக்கிறது.

தமிழர் திருநாள் விழாக் குழுவினரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான மா.தியாகு ஏற்பாட்டில் எம்.ஆறுமுகம்  தலைமையில் நடைபெறவுள்ள  இந்த நிகழ்வை லாருட் நாடாளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான டத்தோ ஹம்சா பின் ஸைனுடின்  அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.

இந்நிகழ்வில் 108 பொங்கல் வைக்கப்படவுள்ளது. உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், மற்றும் பல புதுமையான போட்டிகள் நடைபெறவுள்ளன.

#TamilSchoolmychoice

தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு மேல் சிறப்பான பொங்கல் கலை நிகழ்ச்சி  நடைபெறவுள்ளது.

முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள  இந்நிகழ்வுக்கு சுற்றுவட்டார ப் பொது மக்கள் திரளாக வருகைத்தந்து முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டுமாய் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.