Home இந்தியா அழகிரி பற்றி கேட்டு என்னை புண்படுத்தாதீர்கள்- தி.மு.க.தலைவர் கருணாநிதி!

அழகிரி பற்றி கேட்டு என்னை புண்படுத்தாதீர்கள்- தி.மு.க.தலைவர் கருணாநிதி!

619
0
SHARE
Ad

12TH_KARUNANIDHI_891185fசென்னை, மார்ச் 11 – அழகிரி பற்றி, தேவையற்ற கேள்விகளையெல்லாம் கேட்டு என்னை புண்படுத்தாதீர்கள்,” என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். அறிவாலயத்தில், அவரது பேட்டியில் கூறியதாவது, தி.மு.க. துவக்கத்தில் இருந்து இதுவரையில், ஒவ்வொரு அசைவும், ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஒரு இயக்கம்.

நான் இப்போது படிக்கும் இந்தப் வேட்பாளர் பட்டியல், முற்றிலும் முழுமையானது என, நான் சொல்ல மாட்டேன். ஒன்றிரண்டு திருத்தங்கள் வரக் கூடும். வந்தால், தலைமை நிலையத்தின் சார்பில், அந்தத் திருத்தங்களை வெளியிட்டு, அதுவும் இந்தப் பட்டியலில் இணையக் கூடும்.

கூட்டணிக் கட்சிகளுக்கு, ஐந்து தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளது. மீதி, 35 தி.மு.க., வேட்பாளர்கள். புதிதாக இந்தத் தேர்தலில் போட்டியிடுவோர், 27 பேர்; பெண்கள், இரண்டு பேர் என கருணாநிதி கூறினார்.

#TamilSchoolmychoice

பின், நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் இடம் பெற இருக்கிறதா?
கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற இருக்கிறதா என்பது பற்றி  பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கலாம். ஆனால், நாங்கள் அது பற்றி எந்தச்  செய்தியும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.

அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக பேசியிருக்கிறாரே?
இது, தி.மு.க. வேட்பாளர்களை அறிவிக்கும் கூட்டம். எனவே, தேவையற்ற கேள்விகளையெல்லாம் கேட்டு, என்னை புண்பட வைக்காதீர்கள். அவ்வளவு தான் சொல்வேன் என கருணாநிதி கூறினார்.

இந்த தேர்தலில், அழகிரி ஒதிக்கி வைக்கப்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இடம் பெறவில்லை. நடிகை குஷ்பு, சென்னையில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தொகுதி கேட்டு பணம் கட்டவில்லை. இருப்பினும், வி.ஐ.பி., பட்டியலில் அவர் இடம் பெறுவார் என, கூறப்பட்டது. ஆனால், அவருக்கும், ‘சீட்’ கிடைக்கவில்லை.