Home Kajang by-Election காஜாங் இடைத்தேர்தல்: இரு பெண் வேட்பாளர்கள் நேரடிப் போட்டி!

காஜாங் இடைத்தேர்தல்: இரு பெண் வேட்பாளர்கள் நேரடிப் போட்டி!

542
0
SHARE
Ad

Chiewகாஜாங், மார்ச் 11 – வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள காஜாங் இடைத்தேர்தலில் இரு பெண் வேட்பாளர்கள் நேரடியாகப் போட்டியிடுகின்றனர்.

பண்டார் பாரு பாங்கியிலுள்ள காஜாங் மாநகர சபை விளையாட்டு வளாகத்தில் இன்று காலை 9 மணியளவில் தொடங்கிய வேட்புமனுத் தாக்கலில் தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிடும் மசீச கட்சி வேட்பாளரான டத்தின் படுகா சியூ மெய் பன் தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அதே வேளையில், பிகேஆர் சார்பாக அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தனது மனுத் தாக்கலை செய்தார்.anwar-wan-azizah

#TamilSchoolmychoice

காஜாங் இடைத்தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மார்ச் 7 ஆம் தேதி, ஓரினப்புணர்ச்சி வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததால், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு ஆளானார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அன்வாருக்குப் பதிலாக அவரது மனைவியான வான் அஸிஸா வான் இஸ்மாயில் போட்டியிடுவார் என்று பிகேஆர் அறிவித்தது.