திருடப்பட்ட பயணக் கடவுகளுடன் பயணம் செய்த அந்த இருவரின் பயணச் சீட்டுகளை (டிக்கெட்) ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார் என்ற புதிய தகவலை தாய்லாந்து காவல் துறை வெளியிட்டுள்ளதாக அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
எஃபிஐ புலன் விசாரணையில் இறங்கியுள்ளது.
மலேசிய விமான நிலையத்தின் பலவீனங்களைக் குறிவைத்து தகவல் ஊடகங்கள்
மலேசிய அரசாங்கமும், அதன் அதிகாரிகளும், அமைச்சர்களும் விமானத்தைத் தேடுவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பற்றியே விரிவாக எடுத்துக் கூறி வரும் வேளையில், அந்நிய நாட்டு தகவல் ஊடகங்களோ திருடப்பட்ட பயணக் கடவுகளை சரியாகப் பார்க்காமல் எவ்வாறு மலேசியக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அனுமதித்தனர் என்பது குறித்தே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த விவகாரத்தை மையமாக வைத்தே அந்நிய தகவல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
கோலாலம்பூர் விமான நிலையத்தின் குடி நுழைவுத் துறை கடப்பு மையங்களிலும் பாதுகாப்புத் துறை அம்சங்களிலும் நிறைய பலவீனங்கள் இருந்ததாக அந்நிய தகவல் ஊடகங்கள் குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றன