Home உலகம் தமிழ் இன அழிப்பில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபடுகிறது – ஐ.நா-வில் வடக்கு மாகாண கவுன்சில்...

தமிழ் இன அழிப்பில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபடுகிறது – ஐ.நா-வில் வடக்கு மாகாண கவுன்சில் புகார்!

457
0
SHARE
Ad

UNHRC 7th Sessionஜெனீவா, மார்ச் 12 – இலங்கை அரசு மீது சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாண கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் மாநாட்டில் பேசிய இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் இந்த கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா-வின் நேரடி தலையீடு இன்றி ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இயலாது என அவர் கூறினார். போர் குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய 5 ஆண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசு தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.

இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில் தமிழ் சமூகம் ஐ.நா-வின் உதவியை பெரிதும் நம்பி இருப்பதாக அவர் கூறினார். நில அபகரிப்பு, சிங்களவர் குடியேற்றம், ராணுவ அத்துமீறல், மனித உரிமை மீறல் உள்ளிட்ட செயல்களில் ராஜபக்சே அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.