Home உலகம் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து சாதிப்பதற்கு நிறைய உள்ளன – அதிபர் ஒபாமா நம்பிக்கை!

இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து சாதிப்பதற்கு நிறைய உள்ளன – அதிபர் ஒபாமா நம்பிக்கை!

499
0
SHARE
Ad

11jaishankarவாஷிங்டன், மார்ச் 13 – இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சாதிப்பதற்கு நிறைய உள்ளன என்று அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக ஜெய்சங்கர் சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது ஜெய்சங்கர், தனது மனைவி கியோகோ, மகள் மேத்தா, மகன் துருவா உள்ளிட்டோரோடு சேர்ந்து சென்று அதிபர் ஒபாமாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அப்போது அதிபர் ஒபாமா ஜெய்சங்கரிடம் கூறுகையில், தற்போது இந்தியா தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் அமெரிக்காவின் பார்வையில் இருந்து விலகியுள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து சாதிப்பதற்கு நிறைய உள்ளன என்று தெரிவித்தார்.

தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்சங்கர் தனது பணியின் மூலமாக இருநாட்டிற்கு இடையிலான உரசல்கள் தீர்க்கப்பட்டு உறவுகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க தரப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தியா அமெரிக்காவுக்கு இடையிலான உறவில் இது ஒரு நல்ல முன்னேற்றமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.