நான்கு தேர்தல்களில் பிரசாரம் செய்த அனுபவம் தனக்கு உண்டு என, பெருமையாக கூறும் விந்தியா, வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் குறித்து கூறியதாவது, கூட்டணி அமைத்தால் அ.தி.மு.க.வை தோற்கடித்து விடலாம் என கருணாநிதி நினைக்கின்றார். தி.மு.க. வேட்பாளர்கள் எல்லாம், வேட்பாளராக நிறைய பணம் கொடுத்துள்ளனர்.
இப்படிப்பட்டவர்களை மக்கள் தேர்வு செய்தால், தமிழகம் வளர்ச்சியடையுமா? சொல்லுங்கள். தமிழகத்திற்கு ஏற்றம் தேவை, மத்தியில் மாற்றம் தேவை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய காலம் போய், கட்டளை இடும் நேரம் வரவேண்டும். தி.மு.க.வை நம்பினால் தமிழகம் வளர்ச்சியடைய முடியாது என நடிகை விந்தியா கூறியுள்ளார்.