Home இந்தியா என் முயற்சியால் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் – ஜெயலலிதா !

என் முயற்சியால் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் – ஜெயலலிதா !

423
0
SHARE
Ad

j-jayalalithaa_46காங்கேயம், மார்ச் 14 – இலங்கை சிறையில் உள்ள 177 மீனவர்களும், அவர்களின் 44 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்தேன். அதன் பின்னர் தான் பேச்சுவார்த்தை என்று கூறினேன். மத்திய அரசு மூலம் இந்த நிபந்தனை இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என, ஈரோடு தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஈரோடு தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் செல்வக்குமார சின்னையனை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசில் 17 ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுக என்ன செய்தது?  தமிழக மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என திமுக கூறியது. மீனவர் விரோத காங்கிரஸ் அரசு மற்றும் திமுக,விற்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

#TamilSchoolmychoice

என் முயற்சியால் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இலங்கை சிறையில் இருக்கும் 177 மீனவர்களில் 116 மீனவர்களை மட்டும் இலங்கை அரசு நேற்று விடுவித்தது. மீதமுள்ள 61 மீனவர்களையும் விடுவிக்கும் வரை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை கிடையாது என்றார்.

மேலும் வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்கவும், ஊழல்கள் மூலம் மத்திய அரசிற்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்யவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும், மீனவர் நலனை காத்திடவும் மத்தியில் சிறப்பான ஆட்சி அமையவும் அதிமுக.விற்கு ஓட்டளிக்க அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என ஜெயலலிதா பேசியுள்ளார்.