Home இந்தியா பேருந்துகளில் இரட்டைஇலை சின்னத்தை மறைக்க வேண்டும் – தேர்தல் ஆணையம்!

பேருந்துகளில் இரட்டைஇலை சின்னத்தை மறைக்க வேண்டும் – தேர்தல் ஆணையம்!

510
0
SHARE
Ad

smallbus_1628943gசென்னை, மார்ச் 14 – பேருந்துகளில் சித்தரிக்கப்பட்டுள்ளது   இரட்டைஇலை தான். எனவே அதை மறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்த தகவலை தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைப்படி, கட்சி பிரசாரங்களுக்கு அரசு வாகனத்தையோ, அரசு கட்டிடங்களையோ பயன்படுத்தக் கூடாது. தமிழகம் முழுவதும், அரசு அலுவலகங்களில் இரட்டைஇலை சின்னம், அரசு செலவில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

அவற்றை மறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அனுப்பியுள்ளோம். எனவே, இந்த சின்னங்களை அகற்ற வேண்டும். குடிநீர் பாட்டில், பேருந்து, அரசு மற்றும் பொது சொத்துக்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதா படத்தையும், இரட்டைஇலை சின்னத்தையும் அகற்ற வேண்டும்.

#TamilSchoolmychoice

இதற்கு நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த வழக்கு கடந்த வாரம்Tamil_Daily_News_45330011845 நீதிபதி ராஜா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி, இந்த விவகாரம் குறித்து மனுதாரர் எழுப்பிய கோரிக்கையை ஏற்காடு இடைத்தேர்தலின் போது பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பித்துவிட்டோம்.

தற்போது மீண்டும் அதே கோரிக்கையை எழுப்பியுள்ளனர். இதில் 2 நாளில் முடிவு எடுத்துவிடுவோம். முதல்வர் படத்தை அகற்ற ஏற்கனவே அரசுக்கு உத்தரவிட்டு விட்டோம். மேலும் பேருந்துகளில் இரட்டைஇலை சின்னத்தை மறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.