Home இந்தியா 30 சதவீத விவசாயிகள் மோடிக்கு ஆதரவு!

30 சதவீத விவசாயிகள் மோடிக்கு ஆதரவு!

403
0
SHARE
Ad

imagesடெல்லி, மார்ச் 14 – பாரத் கிருஷிக் சமாஜ்’ என்ற அமைப்புக்காக, வளர்ச்சி அடைந்து வரும் சமூகங்கள் தொடர்பான ஆராய்ச்சி மையம் (சி.எஸ்.டி.எஸ்.,), சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பு, 30 சதவீத விவசாயிகள், மோடிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மொத்தம், 18 மாநிலங்களில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அவர்களில், 2,114 பேர் இளைஞர்கள். எந்த கட்சிக்கு அவர்கள் ஓட்டளிக்க விரும்புகின்றனர், எந்த கட்சி விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுகிறது, எது அவர்களது முக்கிய பிரச்சனை, என  பல கேள்விகள் கேட்கப்பட்டன.

அந்த கருத்து கணிப்பின் முடிவில்
மோடிக்கு 30 சதவீதம் பேரும், காங்கிரசுக்கு 17 சதவீதம் பேரும் ஓட்டளிக்க விரும்புவதாக தெரிவித்தனர். 31 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இளைய விவசாயிகளில், 60 சதவீதம் பேர் நகரங்களில் வேலைக்கு செல்ல  விரும்புகின்றனர்.