Home வாழ் நலம் துளசி பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும்!

துளசி பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும்!

709
0
SHARE
Ad

thulasiமார்ச் 17 – உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று. இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடையதால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட பன்றிக்காய்ச்சலை துளசி இலைகள் ஒன்றிரண்டு நாட்களில் விரட்டி அடித்து விடும் என்கிறார்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஆயுர்வேத நிபுணர்கள். பிரபல ஆயுர்வேத நிபுணர் மருத்துவர் யு.கே.திவாரி கூறும் போது, வைரஸ் மூலம் பரவும் தொற்று நோய்களை “துளசி” மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். இதே போல் பன்றிக்காய்ச்சலை குணப்படுத்துவதும் எளிது.

துளசி இலைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தொற்று நோய் கிருமிகளும் அடியோடு ஒழியும் என்றார். குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக் கழகத்தை சேர்ந்த மருத்துவர் thulasi-leaf-300x300புபேஸ் பட்டேல் கூறும்போது, “துளசி” இலைகள் மூலம் பன்றிக் காய்ச்சலை மிக எளிதாக குணப்படுத்தி விடலாம்.

#TamilSchoolmychoice

இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 20 அல்லது 25 துளசி இலைகளை தினமும் 2 முறை சாப்பிட வேண்டும்.
இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்தவித தொற்றுக்கிருமியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்றார்.