கோலாலம்பூர், மார்ச் 17 – தேசிய கியா உலகக்கோப்பை போனன்சா வாடிக்கையாளர் (KIA Worldcup Bonanza Customer day) தினத்தை முன்னிட்டு ‘நாசா கியா’ (NAZA KIA ) நிறுவனம் தனது புதிய ஸ்போர்ட்டேஜ் ரக காரை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி டத்தோ சையது அப்துல் ஹபீஸ் சையத் அபு பக்கார் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஸ்போர்ட்டேஜ் ரக கார் கவர்ச்சிகரமானத் தோற்றம் மட்டுமல்லாது சிறப்பான இயங்குதிறன் மற்றும் அதி நவீன தொழில்நுட்ப அம்சங்களும் நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்த கார் ஏரோ மெஸ் (Aero Mesh) ரேடியேட்டர் கிரில் , 18 அங்குல கலப்புலோக சக்கரங்கள் (alloy wheel), சார்க்-பின் அலைக்கம்பங்கள் (Shark-fin antenna), முன் மற்றும் பின் விளக்குகள் இரண்டும் எல்இடி (LED) எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது”.
5 வருட உத்திரவாதம் கொண்ட இந்த அதிவேக காரின் விலை தீபகற்ப மலேசியாவில் 138,888 ரிங்கிட்டாகும்.
“நாசா கியா” (NAZA KIA ) நிறுவனம், இந்த ஆண்டில் மட்டும் 15,670 கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கின்றது.
தேசிய கியா உலகக்கோப்பை போனன்சா வாடிக்கையாளர் தினம் நேற்றோடு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.