Home இந்தியா கறுப்பு பணத்தை தடுக்க உதவி தொலைபேசி சேவை!

கறுப்பு பணத்தை தடுக்க உதவி தொலைபேசி சேவை!

550
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_81551325322டெல்லி, மார்ச் 17 – தேர்தல் செலவுக்கு கறுப்பு பணத்தை பயன்படுத்துவதை தடுக்க டெல்லி வருமான வரித்துறை முழு வீச்சில் களமிறங்கியிருக்கிறது. ஆவணங்கள் இல்லாமல், அதிக பணத்தை எடுத்து செல்பவர்களை பிடித்து பணத்தை பறிமுதல் செய்கிறது.

அதன் ஒருகட்டமாக தற்போது பொதுமக்களுக்கான உதவி தொலைபேசி சேவை ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. யாராவது கறுப்பு பணத்தை எடுத்து சென்றாலோ, ஆவணம் இல்லாமல் அதிக பணத்தை கொண்டு சென்றாலோ டெல்லி வருமான வரித்துறைக்கு இந்த உதவி தொலைபேசி சேவை  மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேலும், இதற்காகவே தனி கட்டுப்பாட்டு அறை, புகார்களை பெற தனி துறையையும் அமைத்துள்ளது.