Home இந்தியா பொருத்தமான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் – ராகுல் காந்தி!

பொருத்தமான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் – ராகுல் காந்தி!

743
0
SHARE
Ad

17-1395032806-rahul-459-600டெல்லி, மார்ச் 17 – தேர்தலை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். பொருத்தமான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி. காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வென்று ஆட்சியில் அமர்ந்தால் அடுத்த பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்படுபவர் ராகுல் காந்தி.

தொடர்ந்து அரசியல் குறித்தே சிந்தித்து செயலாற்றி வரும் அவரிடம் செய்தியாளர் சந்திப்பின் போது அவரது சொந்த வாழ்க்கையில் எதிர்காலத்திட்டம் குறித்தான கேள்வி முன் வைக்கப் பட்டது. அதாவது ராகுல் எப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்,

இது, எப்போதும் கேட்கப்படும் கேள்விதான். நான் இப்போது தேர்தலை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். துரதிருஷ்டவசமாக, எனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. ஆயினும், பொருத்தமான பெண் கிடைக்கும்போது, நான் திருமணம் செய்து கொள்வேன் என காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தி கூறினார்.