Home நாடு “விமானம் கடத்தப்பட்டிருந்தால் பிணைக் கைதிகளாக செல்லத் தயார்” – பக்காத்தான் தலைவர்கள்

“விமானம் கடத்தப்பட்டிருந்தால் பிணைக் கைதிகளாக செல்லத் தயார்” – பக்காத்தான் தலைவர்கள்

400
0
SHARE
Ad

mh 370கோலாலம்பூர், மார்ச் 17 – மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 ஒருவேளை கடத்தப்பட்டிருந்தால், அதிலுள்ள 239 பயணிகளுக்குப் பதிலாக நாங்கள் ‘பிணைக் கைதிகளாக’ செல்லத் தயார் என பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக கூறப்பட்டுள்ளது.

பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாஹ்புஸ் ஓமார் இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து கருத்துரைக்கையில், விமானம் கடத்தப்பட்டு தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்து வருகின்றதோ? என தான் சந்தேகிப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், “ஒருவேளை விமானம் எங்காவது கடத்தி வைக்கப்பட்டிருந்தால், எங்களிடம் கூறுங்கள், அதிலுள்ள 239 பயணிகளுக்குப் பதிலாக நாங்கள் பிணைக் கைதிகளாக செல்கின்றோம். இது என்னுடைய தனிப்பட்ட முடிவல்ல. பக்காத்தானைச் சேர்ந்த பல தலைவர்களின் கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அது கடத்தலாக இருக்கலாம் என்றும் மாஹ்புஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட விமானம், 1 மணி நேரத்திற்கு பின்னர் ரேடார் தொடர்பில் இருந்து விலகியது.

கடந்த 9 நாட்களாகத் தேடியும் இதுவரை சிறு தடயம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, வடக்கே கசகஸ்தானில் இருந்து தாய்லாந்து வரையிலும், தெற்கே இந்தோனேசியாவில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரையிலும் தேடும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.