Home அவசியம் படிக்க வேண்டியவை இராமலிங்கேசுவரர் ஆலயத்தின் தலைவர், பொறுப்பாளர்கள் பதவி விலகவேண்டும்- ஆலய அறங்காவலர் அறைகூவல்!

இராமலிங்கேசுவரர் ஆலயத்தின் தலைவர், பொறுப்பாளர்கள் பதவி விலகவேண்டும்- ஆலய அறங்காவலர் அறைகூவல்!

646
0
SHARE
Ad

Ramalingeswarar temple 2 - 440 x 215கோலாலம்பூர், மார்ச் 17 – பங்சார் ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பதிவை, சங்க பதிவகம், ரத்து செய்துள்ளதாக கடந்த சனிக்கிழமை செல்லியலில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.

நான்கு ஆண்டுகள் முறையாக ஆண்டுக் கூட்டம் நடத்தாமல் செயல்பட்டது, கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படாதது,  முறையான அனுமதியின்றி வங்கியிலிருந்து பணத்தை எடுத்தது போன்ற பல்வேறு காரணங்களுக்காக கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி ஆலயத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தின்  அறங்காவலர் செ. தங்கவேலு இது குறித்து கருத்து தெரிவிக்கையில் பதிவு ரத்தானது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர் கூறுகையில்,கடந்த நான்கு ஆண்டுகளாக ஆலயத் தலைவர் வேலாயுதம் கணக்கு காட்ட தவறிவிட்டார் என்றும், மேலும் ஆலயப்பதிவு ரத்தாகிவிட்டக் கடிதம் கிடைத்தும் அதை மறைத்து விட்டார் என்றும் இது தவறான நடவடிக்கையாகும் என்றும் கூறியுள்ளார்.

இந்த தவறான நடவடிக்கைக்கு காரணகர்த்தாக்களான ஆலயத் தலைவர் வேலாயுதம், செயலாளர் எஸ்.சண்முகம், பொருளாளர் ஏ.ராமசாமி, ஆகிய மூவரும் பதவி விலகவேண்டும் என்றும் தங்கவேலு அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அந்த பொறுப்புக்களை டத்தோ சகாதேவன், டாக்டர் சிங்காரம், அப்புதுரை, நவரத்தினம் போன்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறங்காவலர் தங்கவேலு வலியுறுத்தினார்.

இந்த தகவல்களை இன்றைய மக்கள் ஓசை நாளிதழ் வெளியிட்டுள்ளது.