Home உலகம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது – இலங்கை அரசு!

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது – இலங்கை அரசு!

464
0
SHARE
Ad

19-1376883475-peiris-1-600-jpg (1)கொழும்பு, மார்ச் 18 – போர் குற்றம் குறித்து ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ்,

நவிப் பிள்ளை தலைமையிலான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு இலங்கை அரசு சட்டம் மற்றும் நிதி அடிப்படையில் அங்கீகாரம் அளிக்காது என கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் குறித்த விசாரணைக்கு நவிப் பிள்ளையை தலைவராக நியமித்தது முறைப்படி தவறு என்று அவர் கூறினார். 2009-ஆம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டு போர் நிகழ்ந்த நிலையில் பல வாரங்கள் கழித்து இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு நவப் பிள்ளை கோரிக்கை விடுத்ததாக பெரீஸ் கூறினார்.

#TamilSchoolmychoice

அவர் எந்த அடிப்படையில் இந்த கோரிக்கையை எழுப்பினார் என்று பெரீஸ் கேள்வி எழுப்பினார். நவிப் பிள்ளை தலைமையில் நடக்கும் விசாரணை நடுநிலையோடும், வெளிப்படையாகவும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கத்திய வல்லரசு நாடுகள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடுவதாக குற்றம்சாட்டிய பெரீஸ், மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் தவையீடுவதில் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் இன்று பிற்பகலில் விவாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தீர்மானத்தை தோற்கடிக்க சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்ட உள்ளதாகவும் அவர் கூறினார்.