Home நாடு விமானியின் ‘சிமுலேட்டரில்’ 5 முக்கிய தரையிறங்கும் இடங்கள்!

விமானியின் ‘சிமுலேட்டரில்’ 5 முக்கிய தரையிறங்கும் இடங்கள்!

477
0
SHARE
Ad

Pilot.jpgகோலாலம்பூர், மார்ச் 18 – மாயமான MH370 விமானத்தின் தலைமை விமானி ஸஹாரி அகமட் ஷாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட விமானிகள் அறையின் மாதிரி வடிவத்தில் (சிமுலேட்டர்), 5 இடங்களில் விமானம் தரை இறங்குவதற்கான மென் பொருள் திட்டம் (Software programme) செய்யப்பட்டிருந்ததாக பெரித்தா ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாலத்தீவின் மேல் அனைத்துலக விமான நிலையம், அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த இடமான டிகோ கார்சியா, 1000 மீட்டர்  ஓடு பாதை கொண்ட இந்தியாவில் இரண்டு இடங்கள் மற்றும் இலங்கை ஆகிய 5 இடங்களில் தரையிறங்கும் படியாக அந்த மாதிரி வடிவத்திலிருந்த மென்பொருளில் திட்டமிடப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளதாக பெரித்தா ஹரியான் குறிப்பிட்டுள்ளது.

“பாதுகாப்பு இல்லாத ஓடும் தளத்தில் விமானம் தரையிறங்கியிருக்க வாய்ப்பு உள்ளது. அல்லது கடலிலோ, மலையிலோ அல்லது ஏதாவது திறந்த வெளியிலோ விமானம் இறங்கியிருக்கக் கூடும். தற்போது எதையும் முடிவு செய்ய இயலாது” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால் இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் , ஏற்கனவே விமானம் டிகோ கார்சியாவில் தரையிறங்கியிருக்கலாம் என்ற கூற்றை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை விமானிகளுக்கு இது போன்ற விமானி அறையின் மாதிரி வடிவம் கொண்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும், அதற்கான கருவிகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து தான் வரவழைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.