Home உலகம் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சி – ஜெயகுமாரி உள்பட 3 பேர் கைது – இலங்கை...

புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சி – ஜெயகுமாரி உள்பட 3 பேர் கைது – இலங்கை அரசு!

700
0
SHARE
Ad

sl_flagகொழும்பு, மார்ச் 19 – இலங்கை இறுதி கட்ட போரின் போது சிங்கள ராணுவத்தினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா வரைவு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

சமீபத்தில் கொழும்புவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்ணாண்டோவும், யாழ்பாணத்தை சேர்ந்த அருட் தந்தை பிரவீனும் தீவிரவாத் தடைப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சியில் தமிழ் ஆதரவாளர் ஜெயகுமாரி அவரது 13 வயது மகளும் கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.  இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயன்றதால்தான் ஜெயகுமாரி உள்ளிட்ட 3 பேரை கைது செய்ததாக இலங்கை அரசு கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், ஜெயகுமாரியின் 13 வயது மகள் கைது செய்யப்படவில்லை என இலங்கை அரசு விளக்கமளித்துள்ளது. இலங்கையின் வடக்கு பகுதியில் விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்ததால் அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளித்துள்ள பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சித்து வரும் கோபி, கிளாநொச்சியில் ஜெயகுமாரியின் வீட்டில் தங்கியிருந்தார் என்றும் அப்போது பாதுகாப்புப் படையினர் அவரை பிடிக்க முயன்றதாகவும், கோபி தப்பிவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோபிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக ஜெயகுமாரி கைது செய்யப்பட்டார். அப்போது அவரது 13 வயது மகளை பாதுகாப்பாக ஒப்படைக்க உறவினர்கள் இல்லை என்பதால் அவரை பாதுகாப்பு கருதி உடன் அழைத்து வந்ததாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.