Home நாடு எஸ்பிஎம் 2013 தேர்வு முடிவுகள்: 13,970 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’

எஸ்பிஎம் 2013 தேர்வு முடிவுகள்: 13,970 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’

532
0
SHARE
Ad

SPM-2012புத்ரா ஜெயா, மார்ச் 20 – கடந்த 2013 ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

இதில் 13,970 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ பெற்று, முழுத் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு முடிவுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.05 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முழுத் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 13,720 ஆகும்.

#TamilSchoolmychoice

இது குறித்து கல்வித்துறைத் தலைவர் டத்தோ டாக்டர் காயிர் முகமட் யூசோப் கூறுகையில், கல்வியமைச்சை சேர்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், அனைத்து பாடங்களிலும் கிரேடு ஏ பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்த 11,648 எண்ணிக்கையை விட கணிசமாக அதிகரித்து 11,892 ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதே வேளை தனியார் பள்ளிகளில் அனைத்து பாடங்களிலும் கிரேடு ஏ பெற்றவர்களின் எண்ணிக்கை 2,072 இல் இருந்து 2,078 ஆக உயர்ந்திருப்பதாகவும் காயிர் தெரிவித்தார்.

கல்வியமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 366 மாணவர்கள் உட்பட, மொத்தம் 405 மாணவர்கள் கிரேடு ஏ+ எடுத்து சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் காயிர் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு தேர்ச்சியடைந்த மாணவர்களின் தேசிய சராசரி மதிப்பெண்ணை, கடந்த 2012 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், ஜிபிஎன் 5.08 ல் இருந்து 4.93 ஆக மாறியுள்ளது. அதன் படி, இந்த ஆண்டு 0.15 புள்ளிகள் தேர்ச்சி விகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் காயிர் அறிவித்தார்.

குறைந்த அளவிலான ஜிபிஎன் மதிப்பே சிறந்த தேர்ச்சி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.