Home நாடு MH370: சாதகமற்ற வானிலையால் பொருட்களைக் கண்டெடுக்க ஆஸ்திரேலியா விமானப் படை சிரமப்படுகின்றது.

MH370: சாதகமற்ற வானிலையால் பொருட்களைக் கண்டெடுக்க ஆஸ்திரேலியா விமானப் படை சிரமப்படுகின்றது.

400
0
SHARE
Ad

MAS MH 370 440 x 215மார்ச் 20 – ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 2500 கிலோமீட்டருக்கு அப்பால்  இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் காணாமல் போன விமானம் சம்பந்தப்பட்ட பொருட்கள் கடலில் மிதந்து கொண்டிருப்பதை அடையாளம் காட்டிய துணைக் கோளப் படங்களை ஆதாரமாக வைத்து ஆஸ்திரேலியா விமானப் படை அந்த பொருட்களை நெருங்குவதற்கு தற்போது முயற்சித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

இருப்பினும் கடுமையான மழை மற்றும் மேகமூட்டம் ஆகிய காரணங்களால் பொருட்கள் மிதப்பதாக நம்பப்படும் கடல் பகுதியை அடைவதில் ஆஸ்திரேலியா விமானப் படையினர் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

ஆகக்  கடைசியான தகவல்களின்படி 18 கப்பல்களும், 29 விமானங்களும், 6 ஹெலிகாப்டர்களும் அந்த கடல் பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றன. அமெரிக்க போர்க்கப்பல்களும் உதவிக்கு அந்தப் பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன.

அந்தப் பகுதியில் பயணத்திலிருக்கும் வணிகக் கப்பல் ஒன்றும் தன்னாலியன்ற உதவிகளை வழங்க முன்வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேடுதலுக்கு உள்ளாகியிருக்கும் கடல் பகுதி ஆஸ்திரேலியாவின் மேற்கில் இருக்கும் பெர்த் நகரில் இருந்து சுமார் 2,500 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று 13வது நாளாகத் தொடரும் காணாமல் போன விமானத்தைத் தேடும் முயற்சியில் இப்போதுதான் கொஞ்சம் நம்பிக்கை துளிர்த்திருக்கின்றது.

விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில் என்ன நடந்திருக்கும் என்பதைக் காட்டிக் கொடுக்கும் விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிப்பதில்தான் தேடுதல் வேட்டையினர் மும்முரமாக ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.