இது குறித்து ஐ.நா வட்டாரங்கள் தெரிவிப்பதாவது,”ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் முதலில் மாஸ்கோவ் சென்று ரஷ்ய அதிபர் புடின், மற்றும் பிற மூத்த அரசியல் பிரமூகர்களையும், அதனைத் தொடர்ந்து கீவ் சென்று உக்ரைன் பிரதமர் ஆர்செனிய் யாட்சென்யூக் மற்றும் அவரது அமைச்சர்களையும் சந்தித்து பேசுவார்” எனத் தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கிடையே நிலவி வரும் பதற்றம் குறித்து பேசிய ஐ.நா. துணை பொது செயலாளர் ஜேன் எலியாசன் “தற்போதைய சூழல் மிகவும் பதற்றமாக உள்ளதாகவும்,எனினும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகளின் சபை முடிவுகளை எடுக்கும்” என்று கூறியுள்ளார்.