Home தொழில் நுட்பம் கார்களில் ஐஓஎஸ் இயங்குதளத்தை இணைக்கும் ‘கார்ப்ளே’ வசதி – ஆப்பிள் அறிமுகம்

கார்களில் ஐஓஎஸ் இயங்குதளத்தை இணைக்கும் ‘கார்ப்ளே’ வசதி – ஆப்பிள் அறிமுகம்

456
0
SHARE
Ad

carplayமார்ச் 21 – ஐஒஎஸ் இயங்குதளம் கொண்ட கார்களுக்கு ‘IOS in the Car’ என்னும் பெயரில் காட்சியமைப்புக் கருவிகளை கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், அண்மையில் அதனை ‘கார்ப்ளே’ (Carplay) என பெயர் மாற்றம் செய்து வெளியிட்டுள்ளது.

இந்த ‘கார்ப்ளே’ (Carplay) என்னும் ஒருங்கிணைந்த கருவி மூலம் பயனர் தம் ஆப்பிள் கையடக்கக் கருவிகளைக் கார்களில் இணைத்து, காரின் திரை வழியாகப் பயன்படுத்தலாம்.

இந்தக் கருவியின் மூலம் பயனர், ஆப்பிள் திசைக்காட்டி பயன்படுத்துதல், குறுந்தகவல் பார்த்தல், அழைப்புகளுக்கு பதிலளித்தல் போன்றவைகளைச் செய்யமுடியும்.

#TamilSchoolmychoice

இந்த தொழிநுட்பமானது ஐஒஎஸ் வசதி கொண்ட ஃபெராரி, பென்ஸ் மற்றும் வால்வோ ரக கார்களில் அறிமுகம் ஆகிறது.

மேலும் இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் செவ்ரோலேட், ஜாகுவார், ஹோண்டா, நிஸ்ஸான் ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.