Home உலகம் ரஷ்யாவிற்கு மேலும் ஒரு சிக்கல்! ராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்தது இங்கிலாந்து!

ரஷ்யாவிற்கு மேலும் ஒரு சிக்கல்! ராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்தது இங்கிலாந்து!

504
0
SHARE
Ad

uk_ru_2ரஷ்யா, மார்ச் 21 – கிரிமியாவை உக்ரைனிலிருந்து பிரித்து தன்னுடன் இணைத்துக் கொண்டதன் விளைவாக மேற்கத்திய நாடுகள் பல்வேறுவகையில் தங்கள் எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர்.

தற்போது இங்கிலாந்து அரசு, தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவுடனான ராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளர் வில்லியம் ஹக்யூ கூறியதாவது, ரஷ்யாவுடனான ராணுவ ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அதனால் பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த இருந்த கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் ராணுவ தொழில்நுட்பக் கூட்டுறவு ஒப்பந்தம் போன்றவையும் ரத்து செய்யபடுகின்றன என்று அறிவித்துள்ளார்.