இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் முன்னாள் நடிகை ஹேமமாலினி, உத்தர பிரதேச மாநிலம், மதுரா தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.
கட்சியின் மூத்த தலைவர், அத்வானி, குஜராத் மாநிலம், காந்திநகரில், மீண்டும் போட்டியிடுகிறார். ‘ஒலிம்பிக்’ விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச்சுடும் போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்த விளையாட்டு வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.