Home இந்தியா நரேந்திர மோடியுடன் பவன் கல்யாண் சந்திப்பு!

நரேந்திர மோடியுடன் பவன் கல்யாண் சந்திப்பு!

567
0
SHARE
Ad

NarendraModi88 (2)ஆமதாபாத், மார்ச் 22 – காங்கிரசை சேர்ந்த, மத்திய அமைச்சரும், தெலுங்கு நடிகருமான, சிரஞ்சீவியின் தம்பி  பவன் கல்யாண்  தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளார். இவர்  “ஜன சேனா’ என்ற பெயரில்  புதிய கட்சியை துவக்கியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க வுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்துள்ள இவர், நேற்று, குஜராத் சென்று, அம்மாநில முதல்வரும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடியை சந்தித்து, தன்  ஆதரவை தெரிவித்தார்.

பின், அவர் கூறுகையில், மோடி, பிரதமராவதற்காக, தீவிர பிரசாரம் செய்வேன். இந்த தேர்தலுக்கு பின், காங்கிரஸ் கட்சி, இல்லாமல் போய் விடும்  என்றார் பவன் கல்யாண்.