Home தொழில் நுட்பம் ‘கூகுள் சேர்ச்’ செயலியில் இரண்டு புதிய வசதிகள்!

‘கூகுள் சேர்ச்’ செயலியில் இரண்டு புதிய வசதிகள்!

739
0
SHARE
Ad

unnamedகோலாலம்பூர், மார்ச் 22 – கூகுள் நிறுவனம் ஆண்டிராய்டு திறன்பேசிகளுக்கென புதிய செயலிகளை உருவாக்கி, வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில், “கூகுள் சேர்ச்” (Google Search) செயலியில் புதிதாக இரண்டு கட்டளைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

“take a picture”, “take a video” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரு கட்டளைகளை “கூகுள் சேர்ச்” (Google Search) செயலியைப் பயன்படுத்துவோர் பதிவிறக்கம் செய்து தங்கள் திறன்பேசிகளில் பயன்படுத்தலாம்.

#TamilSchoolmychoice

பயனர்கள் இந்த இரு கட்டளைகளைத் திறன்பேசிகளில் கூறுவதன் மூலம் அதில் இருக்கும் கேமராக்களை இயக்கமுடியும். இதேபோல் கூகுள் நிறுவனம் நாம் கேட்கும் பாடல்களின் விவரங்களை அறிய “OK Google” என்ற கட்டளையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.