ரஷ்யா, மார்ச் 22 – ரஷ்யாவிற்குப் பாடம் புகட்டும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனுடன் பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவு கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவெடுத்துள்ளது.
அதன்படி உக்ரைனின் இடைக்கால பிரதமர் அர்சனி யட்சென்யுக் நேற்று பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் தெரிகின்றது.
இந்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் ஹெர்மன் வான் ரொம்பே தெரிவித்துள்ளதாவது “ஜனநாயகம், சட்டம் மற்றும் விதிமுறைகளின் மீது, மதிப்புக்கொண்ட ஒரு நாட்டில், வாழ விரும்பும் மக்களின் விருப்பங்களைத் ஐரோப்பா அங்கீகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுடனான தங்கள் நெருக்கத்தை அதிகரித்துள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.