Home அவசியம் படிக்க வேண்டியவை விமானத்தில் ‘லித்தியம் பேட்டரிகள்’ இருந்தது அம்பலம்!

விமானத்தில் ‘லித்தியம் பேட்டரிகள்’ இருந்தது அம்பலம்!

684
0
SHARE
Ad

mas-airbus-a380கோலாலம்பூர், மார்ச் 22 – மாயமான MH370 விமானத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய பொருள் ஏதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு இதுவரை மறுத்த வந்த மாஸ் நிறுவனம் நேற்று ‘அபாயகரமான பொருட்கள்’ இருந்ததை ஒப்புக்கொண்டது.

இதனால் மீண்டும் ஊடகங்களின் கவனம் விமானத்தின் கார்கோ (கொண்டு சென்ற பொருட்கள்) மீது திரும்பியுள்ளது.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மாஸ் நிறுவனத்தின் தலைவர் அஹமட் ஜாவ்ஹாரி யாஹ்யா, விமானத்தில் லித்தியம் ஐயான் பேட்டரிகள் (lithium-ion batteries) இருந்ததை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

நான்கு நாட்களாக விமானத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லை என்றும், 3 அல்லது 4 டன் மங்கூஸ்டீன் பழங்கள் தான் இருந்ததாகவும் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், லித்தியம் ஐயான் பேட்டரிகள் அளவில் பெரியவை அல்ல என்றும், அனைத்துலக விமானப் போக்குவரத்து இலாகாவின் (The International Civil Aviation Organisation) விதிமுறைகளின் படி, அந்த பேட்டரிகள் முறையான அனுமதியோடு தான் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் ஜாவ்ஹாரி தெரிவித்தார்.

லித்தியம் பேட்டரியால் ஏற்பட்ட விமான விபத்துக்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த கூட்டரசு விமானப் போக்குவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration) வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கடந்த 1991 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியில் இருந்து 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி வரையில்,லித்தியம் பேட்டரிகளை கொண்டு சென்றதால் 141 விமான விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றது.

லித்தியம் பேட்டரியில் ஏற்பட்ட தீப்பொறி பரவி மொத்த விமானமும் எரிந்த இரண்டு சம்பவங்களும் இதில் அடக்கம்.

அண்மையில், ஆசியான ஏர்லைன்ஸ் விமானம் 991 மற்றும் யுபிஎஸ் ஏர்லைன்ஸ் விமானம் 6 இவை இரண்டும் முழுவதுமாக எரிந்ததற்குக் காரணம் லித்தியம் பேட்டரியில் ஏற்பட்ட தீ தான் என்று கண்டறியப்பட்டது.

எனவே, மாயமான MH370 விமானத்திலும் லித்தியம் பேட்டரிகள் கொண்டு செல்லப் பட்டுள்ளதால், அது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விமானத்தில் லித்தியம் பேட்டரி இருந்ததா என்ற கேள்வியை சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி எழுப்பியது. ஆனால் அதிகாரிகள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் குறித்து அப்போது பதிலளிக்க மறுத்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.