Home தொழில் நுட்பம் தகவல் திருட்டைத் தடுக்க புதிய நிரலாக்க மொழி – பேஸ்புக் அறிவிப்பு!

தகவல் திருட்டைத் தடுக்க புதிய நிரலாக்க மொழி – பேஸ்புக் அறிவிப்பு!

516
0
SHARE
Ad

facebookமார்ச் 22 – பேஸ்புக் நிறுவனத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள், இணையத்தில் பரவலாக நடக்கும் தகவல் திருட்டுகளைத் தடுப்பதற்காக புதிய நிரலாகக் மொழியை (Programming Language) கண்டறிந்துள்ளனர்.

“Dubbed Hack” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த  நிரலாகக் மொழியானது உடனுக்குடன் மாறும் தன்மை கொண்டதாகவும், குறைந்தளவில் குறைபாடுகளுக்கு இடமளிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த நிரலாகக் மொழியானது பேஸ்புக்கில் நடைமுறையில் இருந்து வருவதாகவும், விரைவில் அனைவரும் பயன்பெறும் வகையில் “ஓபன் சோர்ஸ்” (Open Source) ஆக வெளியிட இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அண்மையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஊழியர், விண்டோஸ் 8 இயங்குதளத்தின் தகவல்களைத் திருடியதற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.