Home வணிகம்/தொழில் நுட்பம் வால்மார்ட்டின் புதிய வியாபார உத்தி – மக்களிடையே பெரும் வரவேற்பு!

வால்மார்ட்டின் புதிய வியாபார உத்தி – மக்களிடையே பெரும் வரவேற்பு!

981
0
SHARE
Ad

Wal-mart-Taking-Hits-and-Plungingமார்ச் 24 – சில்லறை வர்த்தகத்தில் முன்னோடியாகத் திகழும் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் வால்மார்ட், தனது வாடிக்கையாளர்களுக்காக “Savings Catcher” என்ற பெயரில் புதிய இணையக் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது.

உலகளவில் பெருகிவரும் தொழில் போட்டிகளைச் சமாளிக்க வால்மார்ட் இந்த புதிய இணைய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இணைய கருவி மூலம் வாடிக்கையாளர்கள், தாங்கள் வால்மார்ட்டில் வாங்கிய பொருட்களின் விலைகளை மற்ற விற்பனை அங்காடிகளின் விலைகளுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்.

ஒருவேளை மற்ற விற்பனை அங்காடிகளில் வால்மார்ட்டை விட விலை குறைவாக இருந்தால், அந்த வேறுபாட்டுத் தொகையானது வாடிக்கையாளர்களுக்கே திரும்ப அளிக்கப்படும்.

#TamilSchoolmychoice

வால்மார்ட்டின் இந்த புதிய யுக்தி, வாடிக்கையாளர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றாலும், போட்டியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. இந்த “Savings Catcher” கருவி மூலம் வால்மார்ட், வாடிக்கையாளரின் வாங்கும் திறனை இரகசியமாகத் தெரிந்து கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.

எப்படியாயினும் இந்த புதிய கருவியினால், வால்மார்ட்டின் போட்டியாளர்களுக்கு தலைவலி ஆரம்பமாகும் என்பது உறுதி.