டெல்லி,டிச.12 – பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் நுழைய பல கோடி ரூபாய் செலவிட்ட விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
உலக அளவில் உள்ள சில்லரை விற்பனை மையமான வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைய ரூ.125 கோடி செலவிட்டதாக பரவிய தகவலினால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரனை நடத்த வேண்டும் என்று எத்ர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் வால்மார்ட் விவகாரம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மந்திரி கமல்நாத் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.