Home நாடு MH370 இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்தது! ஒருவர் கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை!

MH370 இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்தது! ஒருவர் கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை!

567
0
SHARE
Ad

mh370கோலாலம்பூர், மார்ச் 24 – மலேசிய விமானம் MH370 இந்தியப் பெருங்கடலுக்குள் சென்றுவிட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து, அதில் இருந்த 239 பயணிகளும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மற்றும் பெய்ஜிங்கில் கடந்த 17 நாட்களாக, சொந்தங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த உறவினர்களிடம், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் மாஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“MH370 விமானம் இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்து மூழ்கி விட்டது உறுதியாகியுள்ளது. அதில் பயணம் செய்த 239 பேரில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பார். விமானம் கடலுக்குள் சென்றதற்கான ஆதராங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த சம்பவத்திற்கு மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது” இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நஜிப் சற்று முன்னர் (மார்ச் 24, இரவு 10 மணி) விமானம் இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றதாக அறிவித்தார்.

இந்த செய்தியைக் கேட்டதும் சீனாவின் பெய்ஜிங்கில் இருந்த உறவினர்களில் சிலர் தங்களது தலையில் அடித்துக் கொண்டு கதறியுள்ளனர். சிலர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று சீனாவைச் சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.