Home இந்தியா பா.ஜ.க. நடத்தி வரும் நாடகம், அக்கட்சிக்கு அழிவைதான் தரப்போகிறது – ஜஸ்வந்த்சிங்

பா.ஜ.க. நடத்தி வரும் நாடகம், அக்கட்சிக்கு அழிவைதான் தரப்போகிறது – ஜஸ்வந்த்சிங்

531
0
SHARE
Ad

24-jaswant-singh48-600புதுடில்லி, மார்ச்  25  –  நமோ எனும் மந்திரம் கடவுளுக்கானது. ஆனால் அம்மந்திரத்தால் மனிதர்களை கடவுளுக்கு இணையாக்கும் முயற்சி நடப்பதாகவும், நரேந்திர மோடியை வைத்து பா.ஜ.க. தற்போது நடத்தி வரும் நாடகங்கள்,

அக்கட்சிக்கு அழிவைதான் தரப்போகிறது என பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் தெரிவித்துள்ளார். அவர் நேற்று பிற்பகலில் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

பின் அவர் கூறுகையில், பா.ஜ.க,வின் தற்போதைய நாடகங்கள் அக்கட்சிக்கு அழிவை தரும் என தெரிவித்தார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஐஸ்வந்த் சிங், கூறியதாவது,

#TamilSchoolmychoice

நான் ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் போட்டியிட சீட் தருமாறு பா.ஜ.க. மேலிடத்தில் அனுமதி கேட்டேன். இந்நிலையில் மேலிடம எனக்கு சீட் தராமல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க,வுக்கு வந்த சோனாராம் செளத்ரிக்கு கொடுக்கப்பட்டது.

இதன் பின்புலத்தில் கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, இருவரும் தான் காரணம். அவர்கள் எடுத்த இந்த முடிவு எனக்கு அதிர்ச்சியளித்தது.

ஏனென்றால் இருவரும் எனக்கு அத்தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்குவதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார்கள்.பார்மரில் பிறந்த நான் பார்மர் தொகுதியில் 9முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன்.

10-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற விரும்பினேன். பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டத்தி்ல் பார்மர் தொகுதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.பின்னர் அடுத்த நாளில் ராஜ்நாத்சிங் ,தொலைபேசியில் என்னை அழைத்தார்.

அவர் என்னிடம் சொல்லும் போது உங்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்றார். பின்னர் யாருக்கு கொடுக்கப்பட்டது என்றேன். பா.ஜ.க. உறுப்பினருக்கு கொடுக்கப்படவில்லை என்றும் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க.வுக்கு வந்தவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

ஏற்கனவே ஒரு முறை என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். அப்போது நிதின் கட்காரி மற்றும் அத்வானி இருவரும் மீண்டும் கட்சியில் சேருமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய் மற்றும் அத்வானியால் மீண்டும் சேர்ந்தேன்.

இப்போதைய சூழ்நிலையில், பார்மர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தேன். சுயேட்சையாக போட்டியிடுவதால் நான் சந்தோசமாகவே இருக்கிறேன் என ஜஸ்வந்த்சிங் கூறினார்.