கோலாலம்பூர், மார்ச் 25 – இந்தியப் பெருங்கடலில் விழுந்த MH370 விமானத்தை தேடுவதற்காக அமெரிக்கா, தனது கடலுக்கடியில் கண்காணிக்கும் கருவிகளை அனுப்பியுள்ளது.
இந்த கருவிகளின் மூலம் கடலில் 15,000 அடி ஆழத்தில் கிடக்கும் பொருட்களை கண்காணிக்க முடியும்.
புளூபின் ட்ரான் (Bluefin drone) என்றழைக்கப்படும் இந்த கருவியானது 5 மீட்டர் நீளமும், 800 கிலோ எடையும் கொண்டது என அமெரிக்காவின் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில், விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கண்டறிய ‘Towed pinger locator’ சோனார் கருவி ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்கா வழங்கும் இந்த கருவியானது இதற்கு முன்னர், கடந்த 2009 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் விழுந்த பிரான்ஸ் விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டறிய உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு கருவிகளும் இன்று ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் – க்கு விமானத்தில் வருகின்றன.
இந்த கருவிகளை இயக்க அமெரிக்காவின் கடற்படையைச் சேர்ந்த குழுவும் உடன் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.