Home உலகம் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்குத் தடை!

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்குத் தடை!

450
0
SHARE
Ad

G20மார்ச் 25 – ஜி-20 நாடுகள் பங்கேற்கும் 9 வது மாநாடு, இந்த ஆண்டின் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்றது.

கிரிமியா விவகாரம் காரணமாக அம்மாநாட்டில் ரஷ்யா பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு “பிரிக்” நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்த தடை குறித்து ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் கூறியதாவது, “சமீபத்தில் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடும் அதிருப்தியில் உள்ளன. இதன் காரணமாக அடுத்து ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தடை விதிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீதான இந்த தடைக்கு இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான “பிரிக்” கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கும் தடைகளை தாங்கள் ஆதரிக்க மாட்டோம் என இந்திய பிரதமர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.