Home உலகம் பொருளாதாரத் தடை எதிரொலி: மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை!

பொருளாதாரத் தடை எதிரொலி: மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை!

516
0
SHARE
Ad

russia_putinமின்ஸ்க், மே 2 – உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐ.நா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், மேற்கத்திய நாடுகளைத்தான் பாதிக்கும். ரஷ்யாவில் எரிசக்தித்துறையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனில் உள்நாட்டு விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீடு, அந்நாட்டில் பல குழப்பங்களை உருவாக்கிவருகின்றது. அதனால் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பனிப்போர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. ரஷ்ய துணைப்பிரதமர் உள்பட உயர்பதவிகளிலுள்ள 17 ரஷ்யர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இதனிடையே ஐ.நா.வும் கடந்த செவ்வாய்க்கிழமை பொருளாதாரத் தடைப்பட்டியலில் மேலும் 15 ரஷ்யர்களின் பெயரை அறிவித்தது. இதனிடையே அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்ஸ்க் நகரில் நடந்த மாநாட்டில் அவர் பேசுகையில், “ரஷ்யா மீது திங்கள்கிழமை விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்துள்ள மேற்கத்திய நிறுவனங்களையே பாதிக்கும். இத்தடை தொடருமானால் அந்நிறுவனங்கள் ரஷ்யாவில் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

உலகின் மிகப்பெரும் எரிசக்தி நிறுவனங்கள் ரஷ்யாவில் முதலீடு செய்துள்ளன. அந்நிறுவனங்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் தடை விதிக்கும் பட்சத்தில் அது உலக அளவில் பெரும் பொருளாதாரப் பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.