லக்சம்பர்க், ஜூன் 23 – கிழக்கு உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை வரும் ஜனவரி மாதம் வரை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதுபற்றி ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு உக்ரைன் பிரச்சனையில் ரஷ்யாவுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதற்காகவே எவ்வித விவாதமும் இன்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொண்டு வரப்பட்ட ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை அடுத்த மாதத்துடன் காலாவதியாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் 2016 ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பல்வேறு விவசாய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யும் தடையை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.