Home இந்தியா விசாகப்பட்டினம்: தங்கக் கட்டிகளைக் கடத்திய 45 ஏர் ஆசியா பயணிகள் கைது!

விசாகப்பட்டினம்: தங்கக் கட்டிகளைக் கடத்திய 45 ஏர் ஆசியா பயணிகள் கைது!

725
0
SHARE
Ad

airasiaவிசாகப்பட்டிணம், ஜூன் 23 – 62 கிலோ தங்கக்கட்டிகளைக் கடத்தியதற்காக ஆந்திரப் பிரதேசத்தில், 56 ஏர் ஆசியாப் பயணிகளில் 45 பேரை அம்மாநிலக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் கடத்திச் சென்ற தங்கக்கட்டிகளின் மதிப்பு 10 மில்லியன் ரிங்கிட் (இந்திய ரூபாய் மதிப்பில் 17 கோடி) ஆகும்.

அந்த 45 பேரில் மலேசியர்களும் உள்ளார்களா? என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, வருவாய்த்துறைப் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence) நடத்திய அதிரடிச் சோதனையில், விசாகப்பட்டினம் அனைத்துலக விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து சென்ற இரண்டு விமானங்கள் மற்றும் சிங்கப்பூரின் சில்க் ஏர் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

#TamilSchoolmychoice

தொடக்கத்தில் ஏர் ஆசியா விமானப் பயணிகள் 20 பேரைச் சோதனையிட்ட அதிகாரிகள், அவர்கள் சந்தேகப்படும்படியாக நிறைய எலக்ட்ரானிக் (மின்னணு) பொருட்களை வைத்திருந்ததைக் கண்டறிந்துள்ளனர். அவற்றைச் சோதனையிட்டதில் தங்கக்கட்டிகள் அக்கருவிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்ததாக, சிங்கப்பூரில் இருந்து சென்ற சில்க் ஏர் விமானப் பயணிகள் 10 பேரின் உடமைகளைச் சோதனையிட்டதில், அவர்களின் எலக்ட்ரானிக் கருவிகளிலும் தங்கக்கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், கோலாலம்பூரில் இருந்து சென்ற இரண்டாவது விமானத்தில் இருந்த பயணிகளின் உடமைகளைச் சோதனையிட்டதில் அதிலும் தங்கக்கட்டிகள் இருந்துள்ளன.