Home இந்தியா உதயநிதி டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்படுவாரா?

உதயநிதி டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்படுவாரா?

520
0
SHARE
Ad

புதுடில்லி : உதயநிதி ஸ்டாலில் அண்மையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய போது, ‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்’ என்று கூறியதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து வடநாட்டுத் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியைச் சேர்ந்த வக்கீல் வினித் ஜிந்தால் என்பவர் இது குறித்து உதயநிதிக்கு எதிராக டெல்லி காவல் துறையில்  புகார் அளித்தார். இந்து மக்களின் மத உணர்வுகளை உதயநிதி ஸ்டாலின் புண்படுத்தி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் உதயநிதி கைதாவாரா – அவர் மீது வழக்கு தொடுக்கப்படுமா – என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.