வாஷிங்டன், மார்ச் 24 – கிரிமியா விவகாரத்தில் ரஷ்ய வங்கிகள் மீது அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் விசா மற்றும் மாஸ்டர் கார்டு பயன்படுத்துவது கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரண்டு ரஷ்ய வங்கிகளுக்கு மட்டும் அத்தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் விடுத்த அறிவிப்பின் படி, எஸ்எம்பி வங்கி மற்றும் இன்வெஸ்ட் கேப்பிடல் வங்கி ஆகிய இரு வங்கிகளில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ரொஷியா மற்றும் சப்சிடரி, சோபின் வங்கி ஆகிய இரு வங்கிகளிலும் அத்தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
உக்கிரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை, ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆதரவாளர்கள் சிலரின் வங்கி கணக்கு, சொத்துக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தடை விதித்தார்.
ஆர்கடி ரோடென்பெர்க் மற்றும் போரிஸ் ரோடென்பெர்க் என்ற அந்த இருவரும் வங்கிகளில் பங்குதாரர்கள் ஆக இருந்தனர்.
இந்த தடையால் ரஷ்ய பங்கு சந்தைகள் வெகுவாக சரிந்தன. சுமார் 70 பில்லியன் டாலர் அளவுக்கு ரஷ்ய பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை, ரஷ்ய வங்கிகளில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.