Home உலகம் அமெரிக்காவிடம் அணுசக்தி மூலப்பொருட்களை அளிக்க ஜப்பான் ஒப்புதல்!

அமெரிக்காவிடம் அணுசக்தி மூலப்பொருட்களை அளிக்க ஜப்பான் ஒப்புதல்!

574
0
SHARE
Ad

japanநெதர்லாந்து, மார்ச் 25 – நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் நடந்துவரும் உலக அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் ஜப்பான், அமெரிக்காவிடம் தாங்கள் வைத்திருக்கும் அணுசக்தி மூலப்பொருட்களை திருப்பித் தர ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் எரிசக்தித் துறை செயலாளர் எர்னஸ்ட் மோனிஸ் தெரிவித்துள்ளதாவது, “ஆராய்ச்சி நோக்கங்களுக்காக 1960களில் ஜப்பானால், அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட அணுசக்தி மூலப்பொருட்களில் 300 கிலோ திரும்பப் பெறுவது என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு உறுதிமொழியாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் அடிப்படையில் ஜப்பான் பிரதமர் தங்களிடம் சேமித்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கிலோ எடை கொண்ட புளுட்டோனியம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போன்றவற்றை அமெரிக்காவிடம் திருப்பித்தர ஒப்புதல் அளித்துள்ள்ளார்.

#TamilSchoolmychoice

புதிய ஒப்பந்தத்தின்படி, அமரிக்காவிடம் கொடுத்தது போக அந்நாட்டின் அணுசக்தித் துறையின் எரிபொருள் மூலம் பெறப்பட்ட புளுட்டோனியமே அங்கு அதிக அளவில் மீதமிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் ஜப்பானின் புகுஷிமா அணு உலை பாதிக்கப்பட்டதினால் பெருமளவு புளுடோனியம் தேங்கிக் கிடப்பதாக இந்தத் தகவல்கள் கூறுகின்றன.

சமீப காலங்களாக வீரியத்துடன் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கங்களின் கைகளில் அணு ஆயுத மூலப்பொருட்கள் கிடைக்கக்கூடாது என்பதற்காக பிற நாடுகளின் சேமிப்பை அமெரிக்கா திரும்பப் பெற முயற்சித்துக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.