Home நாடு செல்லியல் பார்வை: MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!

செல்லியல் பார்வை: MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!

737
0
SHARE
Ad

Malaysian_Airlines_flight_MH370-369833கோலாலம்பூர், மார்ச் 26 – விமானத்தின் ஒரு சிறிய பாகம் கூட இன்னும் கையில் கிடைக்கவில்லை. அதில் பயணம் செய்த 239 பேரின் கதி என்னவானது என்பதும்  புரியவில்லை. தனது அன்பிற்குரியவர்கள் இறந்துவிட்டார்கள் என்று உறவினர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள எந்த ஒரு அடிப்படை ஆதாரங்களையும் மலேசிய அரசாங்கம் வெளியிடவில்லை.

ஆனால்  MH370 விமானம் இந்தியப் பெருங்கடலில விழுந்து விட்டது. அதில் இருந்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என  பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று திடீரென அறிவித்துள்ளது பயணிகளின் உறவினர்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து, விமானக் கடத்தல், விமானி தற்கொலை, தொழில்நுட்பக் கோளாறு, போலி பாஸ்போர்ட் பயணிகள், மலேசிய இராணுவத்தின் ரேடாரில் பதிவான அடையாளம் தெரியாத விமானம் என்று பல மர்ம முடிச்சுகள் போடப்பட்டு, அதில் எந்த ஒரு முடிச்சையும் அவிழ்க்காமல் வெறும் தகவலை மட்டும் அடுக்கடுக்காக ஊடகங்களுக்கும், உறவினர்களுக்கும், மக்களுக்கும் கூறிக்கொண்டு வரும் மலேசிய அரசாங்கத்தின் பதிலை கண்டு மிகவும் விரக்தியடைந்த சீனப் பயணிகளின் உறவினர்கள் நேற்று பெய்ஜிங்கில் மலேசிய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, மலேசிய அரசாங்கத்தை “கொலைகாரர்கள்” என்று விமர்சித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பழைய ஆரூடங்களையெல்லாம் விடுத்து, நஜிப்பின் நேற்றைய அறிவிப்பை மட்டும் கவனத்தில் கொள்ளலாம் என்றாலும், அதிலும் பல கேள்விகள் எழுகின்றன.

காஜாங் இடைத்தேர்தலுக்கு மறுநாள் அறிவிப்பு ஏன்?20140122_Najib-Razak_reuters

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் (Air Accidents Investigation Branch – AAIB), அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விமானம் சென்ற பாதையை கண்டறிந்ததில், இறுதியாக விமானம் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பறந்து இந்தியப் பெருங்கடலின் நடுவே முடிவடைந்திருக்கின்றது என்று நஜிப் நேற்று அறிவித்தார்.

கடந்த மார்ச் 12 ஆம் தேதியே, விமானத்தின் பாகங்கள் தென் சீனக் கடலில் மிதப்பதாக சீன துணைக்கோள் தகவல் வெளியிட்ட நிலையில், அதன் பின்னர் 12 நாட்கள் கழித்து, விமானம் இந்தியப் பெருங்கடலில் தான் விழுந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தது ஏன்?

இந்த கேள்வியை நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன செய்தியாளர் ஒருவர் கேட்க, அதற்குப் பதிலளித்த இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின், சீன துணைக்கோள் வெளியிட்ட தகவலை வைத்து மட்டும் முடிவு செய்து விட முடியாது என்றும், ஆனால் தென் சீனக் கடலில் அப்போது பாகங்களை தேடும் பணி நடைபெற்று தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவித்தார்.

எனினும், சரியாக காஜாங் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாள், விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டது என்று நஜிப் உறுதியாக அறிவித்திருப்பது, உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக – குறிப்பாக வான் அசிசாவின் அபார வெற்றியை மக்களின் மனங்களில் இருந்து திசை திருப்பும் அரசியல் வியூக அறிவிப்போ – என்ற சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது என்று முன்பே முடிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் காஜாங் இடைத்தேர்தல் நேரத்தில் வெளியிட்டால், அரசாங்கத்திற்கு அவப் பெயர் வந்து விடுமோ, அதனால் காஜாங்கில் உள்ள சீன வாக்காளர்களின் வாக்குகள் பாதிக்கப்படலாமோ  என்ற அச்சத்தில் தகவலை வெளியிடுவதில் தாமதப்படுத்தியிருக்கலாம் என்பது நட்பு ஊடகங்களில் பலரின் கருத்தாக உள்ளது.

Hishamuddin Hussein Onn 300 x 200“விசாரணை தொடர்கிறது” – அதிகாரிகளின் ஒரே பதில்

போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இருவர் குறித்தும், விமானி வைத்திருந்த சிமுலேட்டர் கருவி குறித்தும், துணை விமானி முன்பு ஒரு முறை பெண்களை காக்பிட் அறையில் நுழைய அனுமதி அளித்தது குறித்தும், விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் 200 கிலோ லித்தியம் பேட்டரி குறித்தும் விசாரணை நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.

ஆனால் இன்று வரையில் விசாரணையில் கண்டறிந்த தகவல்கள் என்ன? அதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என்ன? என்பது பற்றி எந்த ஒரு விளக்கமும் மலேசிய அதிகாரிகளிடமிருந்து கிடைக்கவில்லை.

மலேசிய இராணுவத்தின் ரேடாரில் பதிவாகியிருந்த ‘அடையாளம் தெரியாத’ அந்த விமானம், MH370 தான் என்பதைக் கூட அதிகாரிகள் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் இராணுவமே மெத்தனப் போக்காக, ‘அடையாளம் தெரியாத’ விமானம் ஒன்று பறந்தது என்று இன்று வரையில் கூறிவருவது மலேசியாவின் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை உலக நாடுகள் அனைத்திற்கும் வெளிச்சம் போட்டு காட்டுவது போலாகிறது.

துணைக்கோளால் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள்26acdcea4bd29e1f9c247a3618b68518

கடந்த மார்ச் 12 ஆம் தேதி, தென் சீனக் கடலில் பாகங்கள் மிதப்பதாக முதன் முதலாக சீனா துணைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டது.

அதன் பின்னர், கடந்த மார்ச் 20 ஆம் தேதி, இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலிய துணைக்கோள் 24 மீட்டர் நீளமுடைய மிதக்கும் பொருள் ஒன்றை கண்டறிந்தது.

அதனைத் தொடர்ந்து மார்ச் 22 ஆம் தேதி, சீன துணைக்கோள் அதே இந்தியப் பெருங்கடல் பகுதியில் இரண்டு மிதக்கும் பொருள்களைக் கண்டறிந்தது.

அதே வேளையில், பிரான்ஸ் நாட்டு துணைக்கோளும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மிதந்த பொருள் ஒன்றை கண்டறிந்தது.

இறுதியாக, சீனாவின் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் நேரடியாக கடலில் மிதந்த வெள்ளை நிறப் பொருள் ஒன்றை கண்டறிந்தது.

ஆனால், இவ்வளவு விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப வசதி இருந்தும், துணைக்கோள் கண்டறிந்த அந்த பொருட்களைக் மீட்புப் படையினரால் கைப்பற்ற முடியாமல் போன மர்மம் தான் ஏனோ விளங்கவில்லை.

bdb4fc0af229c410aa12eb00b203f8a2கறுப்புப் பெட்டியை தேடுவதில் தாமதம் ஏன்?

விமானம் இந்தியப் பெருங்கடலுக்குள் தான் விழுந்திருக்கிறது என்று 19 ஆம் நூற்றாண்டு இயற்பியல் தத்துவமான ‘டிராப்புலர் எபெக்ட்’ ன் அடிப்படையில் கண்டறிந்தாகிவிட்டது. அப்படியானால், விமானத்தின் கறுப்புப் பெட்டி கடலுக்கு அடியில் தான் இருக்க வேண்டும்.

விமானம் கடலில் விழுந்ததற்கான காரணம் என்ன?, பயணிகளுக்கு என்ன நேர்ந்தது? போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்க இருக்கும், MH370 விமானத்தின் கறுப்புப் பெட்டியின் ஆயுட்காலம் இன்னும் 12 நாட்கள் தான்.

30 நாட்கள் தான் அதிலுள்ள மின்கலம் தாங்கும் சக்தியுடையது. அதன் பின்னர் அதிலுள்ள தகவல் அழிவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கா அனுப்பிய கடலுக்குள் கண்காணிக்கும் சாதனங்களை வைத்து கறுப்புப் பெட்டியை தேடும் பணி ஏப்ரல் 5 ஆம் தேதி தான் தொடங்குவதாக இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் நேற்று அறிவித்தார்.

அவரின் அறிவிப்பின் படி, கறுப்புப் பெட்டியை தேட சாதனத்தை கடலுக்குள் அனுப்புவதற்கே இன்னும் 10 நாட்கள் தாமதம் ஆகின்றது. அதன் பின்னர் அடுத்த 3 நாட்களில் கறுப்புப் பெட்டியை கண்டறியவில்லை என்றால் அதிலுள்ள தகவல்கள் அழிவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஏன் இந்த தாமதம்? அமெரிக்கா நேற்றே கடலுக்கடியில் கண்காணிக்கும் சாதனத்தை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியதாக அறிவித்துள்ளது.

எனினும், தேடுதல் பணியை தொடங்குவது வேண்டுமென்றே தாமதப்படுத்தப் படுகின்றதோ என்ற எண்ணமே  மேலோங்குகின்றது.

ஆனால் ஒன்று உறுதியாகத் தெரிகிறது… கறுப்புப் பெட்டி கிடைத்துவிடும் பட்சத்தில் மலேசியாவிலோ அல்லது உலக அளவிலோ பல தலைகள் உருளப் போவது நிச்சயம். இல்லையென்றால் காலம் முழுதும் இந்த மர்ம முடிச்சு அவிழாமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

 – செல்லியல் ஆசிரியர் குழு