கோலாலம்பூர்,பிப்.15- வரும் பொதுத்தேர்தலில் மனித வளத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தொகுதி தேர்தல் கேந்திரத்தின் நெருக்குதல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படலாம் என்றும் எனத் தெரிய வருகிறது.
அண்மையில் பிரதமர் ஜோகூர் தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது சிகாமட்டில் இந்திய வாக்காளர்கள் மிகவும் குறைவாஜ இருப்பதால் சுப்பிரமணியத்தை நிறுத்த வேண்டாம் என்றும், சீன வேட்பாளரை நிறுத்தினால் தே.மு.வின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்துரைத்த டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் தான் நிறுத்தப்பட மாட்டாது என்ற இச்செய்தியை மறுத்ததோடு சிகாமட் தொகுதியை தற்காத்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.