Home இந்தியா நாடாளுமன்றத் தேர்தலில் திருநங்கை கல்கி போட்டி!

நாடாளுமன்றத் தேர்தலில் திருநங்கை கல்கி போட்டி!

752
0
SHARE
Ad

3b0db76e-02d6-4a96-8f88-c2e9ab525062_S_secvpf (1)புதுச்சேரி, மார்ச் 28  நாடாளுமன்றத் தேர்தலில் திருநங்கை கல்கி, விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். ‘நர்த்தகி’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தவர் இவர்.

திருநங்கையான இவர், விருப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் சிறப்பு பிரதிநிதியாக அமெரிக்காவுக்கு சென்று வந்துள்ள இவர், ‘சகோதரி’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து திருநங்கை கல்கி புதுச்சேரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,

#TamilSchoolmychoice

நான் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் எம்.ஏ. முதுகலை பட்டமும், சிதம்பரம் பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுகள் கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். சமூக சேவையில் கடந்த 10 ஆண்டுகளாக நான் ஈடுபடுவதால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விழுப்புரம் தொகுதி மக்களை சந்தித்து ஆதரவு கேட்டேன். திருநங்கையான என் மீது அனைவரும் அன்பு கொண்டுள்ளனர்.

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறந்த மக்கள் பிரதிநிதியாக செயல்படுவேன். விழுப்புரத்தை தொழில் வளர்ச்சி பெற்ற நகரமாக பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய செய்வேன். என அவர் கூறினார்.