Home நாடு பாலிங்கியான் இடைத்தேர்தல்: தேசிய முன்னணி அதிக பெரும்பான்மையில் வெற்றி!

பாலிங்கியான் இடைத்தேர்தல்: தேசிய முன்னணி அதிக பெரும்பான்மையில் வெற்றி!

494
0
SHARE
Ad

Balingian by-electionசரவாக், மார்ச் 23 – இன்று நடைபெற்ற சரவாக் மாநிலம் பாலிங்கியான் இடைத்தேர்தலில், தேசிய முன்னணி அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்று தனது தொகுதியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

தேசிய முன்னணி வேட்பாளர் யூசிப்னோஷ் பாலோ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் அப்துல் ஜாலில் பூஜாங் -ஐ விட 6,911 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

சரவாக் மாநில முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட், தனது பதவியை ராஜினாமா செய்து, கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அம்மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றதால், அவரது தொகுதியான பாலிங்கியானில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

வாக்குகள் விபரம் பின்வருமாறு:- 

தே.மு வேட்பாளர் யூசிப்னோஷ் பாலோ – 8,194

பிகேஆர் வேட்பாளர் அப்துல் ஜாலில் பூஜாங் – 1,283

பெரும்பான்மை – 6,911