Home நாடு மார்ச் 29 ல் பாலிங்கியான் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மார்ச் 29 ல் பாலிங்கியான் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

502
0
SHARE
Ad

abdul-aziz-yusof3-aug25கோலாலம்பூர், மார்ச் 6 – சரவாக் மாநிலம் பாலிங்கியான் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜீஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 5 பொதுத்தேர்தலுக்குப் பிறகு நாட்டில் நடக்கும் நான்காவது இடைத்தேர்தலான பாலிங்கியான் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 17 ஆம் தேதியும், தேர்தல் மார்ச் 29 ஆம் தேதியும் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

சரவாக் மாநில முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட், தனது பதவியை ராஜினாமா செய்து, கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அம்மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றதால், அவரது தொகுதியான பாலிங்கியானில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

பாலிங்கியான் தொகுதியில் 13,366 வாக்காளர்கள் உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவு 910,000 ரிங்கிட் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.